ஆத்தூரில் 94-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வமத மாநாட்டில் உரையாற்றிய 125-ஆம் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
அணிவகுப்பு ஊர்வலம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ராணிப்பேட்டை, வீரராகவர் தெரு, கைலாசநாதர் தெரு, தாயுமானவர் தெரு, ராமலிங்க வள்ளலார் தெரு, காமராஜனார் சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது.இதனைத் தொடர்ந்து என்.ஸ்ரீதர் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாகூர் கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர் என்.ஆர்.பழனிவேல், பொறியாளர் என்.வெங்கடேசன், எஸ்.சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடதமிழக தலைவர் கே.குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவில் ஹிந்து வழக்கமுறை, பண்பாடு வளர பாடுபட வேண்டும்.
நொம் எல்லோரும் ஒன்றாக இருந்து செயல்பட்டால் விவேகானந்தர் கூறியது உண்மையாகும். இந்தியா வல்லரசாக மாறும் என்பது உண்மை.வருங்கால சமுதாயத்துக்கு நம்முடைய ஒற்றுமையை நிரூபிக்கவேண்டும் என்றார்.
கூட்டத்தில் பி.எஸ்.ஜவஹர்லால்,பி.எஸ்.மாணிக்கம், எம்.அண்ணாதுரை, ஏ.எஸ்.மாதேஸ்வரன், கே.ஏ.திருப்பதிராஜா, டி.ஜெயஆனந்த், கே.பாஸ்கர், ஜி.செந்தில்ஐயர்,டி.நாகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

