அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஆத்தூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

ஆத்தூரில்  94-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரீய  ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில்

Updated On :22 அக்டோபர் 2018, 2:40 am

ஆத்தூரில்  94-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரீய  ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வமத மாநாட்டில் உரையாற்றிய 125-ஆம் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
அணிவகுப்பு ஊர்வலம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ராணிப்பேட்டை, வீரராகவர் தெரு, கைலாசநாதர் தெரு, தாயுமானவர் தெரு, ராமலிங்க வள்ளலார் தெரு, காமராஜனார் சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது.இதனைத் தொடர்ந்து  என்.ஸ்ரீதர் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாகூர் கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர்  என்.ஆர்.பழனிவேல், பொறியாளர் என்.வெங்கடேசன், எஸ்.சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடதமிழக  தலைவர் கே.குமாரசாமி ஆகியோர்  கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவில் ஹிந்து  வழக்கமுறை, பண்பாடு வளர பாடுபட வேண்டும். 
நொம் எல்லோரும் ஒன்றாக இருந்து செயல்பட்டால் விவேகானந்தர் கூறியது உண்மையாகும். இந்தியா வல்லரசாக  மாறும் என்பது உண்மை.வருங்கால சமுதாயத்துக்கு  நம்முடைய ஒற்றுமையை நிரூபிக்கவேண்டும் என்றார்.
கூட்டத்தில் பி.எஸ்.ஜவஹர்லால்,பி.எஸ்.மாணிக்கம், எம்.அண்ணாதுரை, ஏ.எஸ்.மாதேஸ்வரன், கே.ஏ.திருப்பதிராஜா, டி.ஜெயஆனந்த், கே.பாஸ்கர், ஜி.செந்தில்ஐயர்,டி.நாகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.