அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வர் பொறுப்பேற்பு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மருத்துவர் எம்.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மருத்துவர் எம்.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்த பி. கனகராஜ், கடந்த வாரம் ஓய்வுபெற்றார். இதைத் தொடர்ந்து மருத்துவர் பி.வி. தனபால் பொறுப்பு முதல்வராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், இக் கல்லூரி முதல்வர் பதவிக்கு, அங்கு பணிபுரியும் முதுநிலை மருத்துவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிபவரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் துறை தலைவருமான எம்.கே. ராஜேந்திரன் முதல்வர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் வியாழக்கிழமை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பையும், தொடர்ந்து அங்கேயே முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ். எம்.சிஎச். படிப்பை முடித்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com