மேச்சேரி ஒன்றியத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 01st April 2019 10:15 AM | Last Updated : 01st April 2019 10:15 AM | அ+அ அ- |

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாலூருவிக் கொட்டாய், எருமப்பட்டி, காளிகவுண்டனூர், தெத்திகிரிப்பட்டி, புக்கம்பட்டி, செம்மனூர், ஓலைப்பட்டிவெள்ளார், அரங்கனூர், சிந்தாமணியூர், மேச்சேரி உட்பட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மேச்சேரி ஒன்றிய அதிமுக செயலாளர் சதாசிவம், கிராம செயலாளர்கள் எஸ்.திருமலை, என். பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் வி. நடராஜன், மாவட்ட பிரதிநிதி மனோகரன் தேமுதிக நிர்வாகிகள் பூபதி, கோவிந்தன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.