லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி
By DIN | Published On : 11th April 2019 09:28 AM | Last Updated : 11th April 2019 09:28 AM | அ+அ அ- |

அம்மம்பாளையத்தில் டிரைலர் லாரி கவிழ்ந்ததில், நிகழ்விடத்திலேயே ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கொச்சின் நோக்கி சென்ற டிரைலர் லாரியை, திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (28) ஓட்டிச் சென்றார். அப்போது, முன்னால் சென்ற ஆட்டோ உடனடியாக நிறுத்தியதால், அதில் மோதாமல் இருக்க திருப்பிய போது டிரைலர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைலர் லாரி இரண்டாக உடைந்ததில், லாரியின் அடியில் ஓட்டுநர் கோடீஸ்வரன் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் கே.முருகேசன் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.