ஐயனாரப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 11th April 2019 09:27 AM | Last Updated : 11th April 2019 09:27 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே. நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஐயனாரப்பன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகப் பெருமான், கருப்ப சாமி, பூரணாதேவி, புஷ்கலாதேவி, கன்னிமார்கள், சுதை தெய்வங்கள் ஆகிய ஆலயத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த மாதம் 23-ஆம் தேதி யாகசாலை கால் போடும் நிகழ்ச்சியும், 31-ஆம் தேதி முளைப்பாரி போடுதலும், ஏப். 5-ஆம் தேதி வெள்ளி தீர்த்தக் குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்புக் கட்டுதல் விழாவும், 7-ஆம் தேதி இரவு கிராம சாந்தியும், 8-அம் தேதி கஞ்சமலை சித்தர் கோயிலிலிருந்து தீர்த்தக் குடம் ஊர்வலமும், 9-ஆம் தேதி யாகசாலை பூஜையும், 10-ஆம் தேதி புதன்கிழமை மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இவ்விழாவில் கே.கே நகர் , இளம்பிள்ளை, இடங்கணசாலை, இரும்பாலை, புளியம்பட்டி, கொசவப்பட்டி, முருங்கப்பட்டி, பெத்தாம்பட்டி, இலகுவம்பட்டி, கன்னந்தேரி, கொல்லப்பட்டி, அழகப்பம்பாளையம் புதூர், சித்தர் கோயில், மகுடஞ்சாவடி, சின்னப்பம்பட்டி, மேட்டூர், கோவை, கள்ளக்குறிச்சி, ஒசூர், ஆத்தூர், பென்னாகரம், மன்னதாகவுண்டனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். மேலும், கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும், கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.