ஆத்தூரில் தேமுதிக வேட்பாளர் பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 02:42 AM | Last Updated : 17th April 2019 02:42 AM | அ+அ அ- |

ஆத்தூரில் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருடன் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, ஆத்தூர் நகரச் செயலாளர் அ. மோகன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, காந்தி நகர் வீடு கட்டும் சங்கத் தலைவர் ஈ. நூர்முகமது, துணைத் தலைவர் வி. கதிரேசன், அவைத் தலைவர் பி. கலியன், தேமுதிக மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீ. காளிமுத்து, நகரத் தலைவர் வி.எல். டி. சண்முகம், பாமக நகரச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...