கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 26th April 2019 02:56 AM | Last Updated : 26th April 2019 02:56 AM | அ+அ அ- |

ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தில் கைதான கிராம நிர்வாக அலுவலர் சரவணனை ஆத்தூர் கோட்டாட்சியர் அபுல் காசிம் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.
ஆத்தூரை அடுத்த கடம்பூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர் சரவணன் (34). இவர் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த சரவணனை கடந்த வாரம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் (பொ) என். கேசவன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதையடுத்து, ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அபுல்காசிம், கைதான சரவணனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.