கெங்கவல்லியில் 5 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th April 2019 02:57 AM | Last Updated : 26th April 2019 02:57 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் நடைபெற்ற ஆர்.டி.ஒ. ஆய்வில் விதி மீறியது ஆவணங்கள் இல்லாதது தொடர்பாக 5 வாகனங்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆத்தூர் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் ஜெயகௌரி தலைமையில் போக்குவரத்துத் துறை ஆய்வாளர் ராமரத்தினம் உள்ளிட்ட அலுவலர்கள் ஆத்தூரிலிருந்து கெங்கவல்லி செல்லும் சாலையில் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த வழியே உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்கள், பதிவு எண் எழுதாமல் வந்த வாகனங்கள் என மொத்தம் ஐந்து வாகனங்களை போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டன. மேலும் அந்த வழியே, தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.