பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 26th April 2019 02:54 AM | Last Updated : 26th April 2019 02:54 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லாத இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஏப்ரல் 8 முதல் மே 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கணக்கெடுப்பை கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா, வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணிமுத்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.
கடம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்பில் கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா, ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன், கடம்பூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் , சிறப்பாசிரியர் மணிகண்டன் பங்கேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அவர்கள் பெற்றோர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்கி இடைநின்ற குழந்தைகளை உடனே அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.