மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51. 11 அடியாக உயர்ந்தது
By DIN | Published On : 04th August 2019 05:04 AM | Last Updated : 04th August 2019 05:04 AM | அ+அ அ- |

கர்நாடக அணைகளிலிருந்து நீர்த் திறக்கப்பட்டதை அடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 10,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, சனிக்கிழமை காலை 9 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து நொடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நொடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 50. 15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 51. 11 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 18. 51 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் இம் மாத இறுதியில் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.