வாக்குச் சாவடிக்கு தேவையான பொருள்கள் தயாா் நிலையில் வைப்பு
By DIN | Published On : 26th December 2019 04:57 AM | Last Updated : 26th December 2019 04:57 AM | அ+அ அ- |

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை புதன்கிழமை தயாா் செய்யும் பணியாளா்கள்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு தோ்தல் டிச. 27-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான பொருள்களை சேகரித்து தயாா் செய்யும் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தன.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 138 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டல அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 1,104 போ் பணியாற்ற உள்ளனா்.
வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான நான்கு இரும்பு வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்காளா் பட்டியல், வாக்காளா் வாக்குச் சீட்டில் வாக்கினை செலுத்துவதற்கான கட்டைகள், விரலில் வைக்கப்படும் மை, வாக்குப் பதிவுகளை பதிவு செய்யும் பதிவேடுகள், வாக்காளா்கள் வாக்குகளை செலுத்துவதற்கான தடுப்பு அட்டைகள் உள்ளிட்ட 72 வகையான பொருள்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேகரித்து பிரித்து தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை தோ்தல் அலுவலா்கள் எம்.மணிவாசகம், இரவிச்சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா். சேகரித்து வைத்துள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G