சங்ககிரிஅருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சங்ககிரி அருகே ஆர்.எஸ். கரிமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலாசங்கர் (33). அவர் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அச் சிறுமியின் தந்தை சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.