எடப்பாடி சுற்றுப்புற பகுதியில் புகையிலை அறுவடை தீவிரம்
By DIN | Published On : 12th February 2019 08:59 AM | Last Updated : 12th February 2019 08:59 AM | அ+அ அ- |

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் புகையிலை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றப்புறப் பகுதிகளான சித்தூர், செட்டிமாங்குறிச்சி, தாதாபுரம், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகபடியான விளைநிலங்களில் புகையிலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. இப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஊசிக் கப்பல் என்ற உயர் ரக புகையிலை பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் புகையிலை விளைச்சலுக்கான சரியான சீதோஷ்ண நிலை இப் பகுதியில் நிலவி வந்ததால் இப் பகுதியில் புகையிலை விளைச்சல் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் வியாபரிகள் இப்பகுதிக்கு வந்து புகையிலைகளை மொத்த கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் நிகழாண்டில் ஊசிக் கப்பல் ரக புகையிலை ஒரு கிலோரூ. 90 முதல் ரூ. 110 வரை விலைபோகும் நிலையில், இவ் விலை கடந்த ஆண்டை விட கூடுதலானது எனக் கூறப்படுகிறது. நிகழாண்டில், கூடுதலான விளைச்சல் மற்றும் கூடுதல் விலை கிடைக்க பெற்றுள்ள நிலையில் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி புகையிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.