மாணவியருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 12th February 2019 09:00 AM | Last Updated : 12th February 2019 09:00 AM | அ+அ அ- |

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சக்திக் குழு வாயிலாக மாணவியருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு, உடல் ஆரோக்கியம், ரத்த சோகை தவிர்ப்பு, ஊட்டச்சத்து, தன்சுத்தம், தொடு உணர்ச்சி துôண்டல் தடுப்பு முறை குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குடற்புழு நீக்க மாத்திரையின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து தும்பல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர். பிரீத்தி, மாவட்ட ஆட்சியர் சக்தி அட்டையை பயன்படுத்தும் முறை குறித்து சக்திக்குழு தலைவர் ஆசிரியை க.சாந்தி ஆகியோர் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர். அனைத்து மாணவ-மாணவியருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கணித ஆசிரியர் அ. சிவக்குமார் நன்றி கூறினார்.