வைக்கோல்பாரம் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து சேதம்
By DIN | Published On : 12th February 2019 08:59 AM | Last Updated : 12th February 2019 08:59 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே திங்கள்கிழமை வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி தீப்பற்றி சேதமடைந்தது.
பூலாம்பட்டியில் மோலப்பாறை பகுதியில் தனியார் தோட்டத்திலிருந்து வைக்கோல்போர் ஏற்றிக் கொண்டு, சேலம் மாவட்டம் செலவடை கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, கூடக்கல் அருகில் உள்ள கலர்பட்டி அருகே சென்றபோது சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதாம். இதில் வைக்கோல்போர் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் இறக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.