கெங்கவல்லி நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2019 08:34 AM | Last Updated : 07th January 2019 08:34 AM | அ+அ அ- |

கெங்கவல்லி நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜன.1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாற்றுப் பொருள்கள் வராத நிலையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்களை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்யபடுவதை தற்போது உள்ள சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி நிர்வாகத்தினரை கெங்கவல்லி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆண்டோ, செல்வராஜ், முருகானந்தம், பரணி, வேல்முருகன், காதர் மொய்தீன், ஜக்கிரியா, கோபாலகிருஷ்ணன், ராகா, ரத்தினம், தஸ்தகிர், ஜெயசீலன் உள்பட பலர் கலந்த
கொண்டனர்