இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பெட்ரோல், டீசல் தரம் மற்றும் அளவு சரிபார்த்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் அதன் பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு தரம், அளவு, அடர்த்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மண்டலம் சார்பில் தாரமங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் பகுதி விற்பனை மேலாளர் ஏ.வெங்கடேஸ்வர ராவ் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, அனைத்திந்திய குற்றம் மற்றும் ஊழல் தடுப்புக் குழுத் தலைவர் மெரினா ஷாக்ஸ், கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் ந.ராஜமணிகண்டன், தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் பிடிக்கப்பட்டு, அளவு குடுவையில் வைத்து அதன் தரம், அடர்த்தி ஆகியவை சரிபார்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தாராமங்கலம் வேதாத்திரி நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் டி.பி.எஸ்.வடிவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.