ரயில்களில் திருட்டைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

ரயில்களில் திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலைய போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆர்.பி.எஃப்.) இணைந்து விழிப்புணர்வு பிரசாரம்செய்தனர்.
Updated on
1 min read


ரயில்களில் திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலைய போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆர்.பி.எஃப்.) இணைந்து விழிப்புணர்வு பிரசாரம்செய்தனர்.
அனைத்து ரயில்களிலும் போலீஸார் ஏறி பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினர். இதுதவிர ரயில்களில் சந்தேக நபர்கள் இருந்தாலோ அல்லது திருட்டுகள் நடந்தாலோ  உடனே 1512 அல்லது 9962500500 என்ற எண்ணிலோ அல்லது  9498101967 என்ற செல்லிடபேசியிலோ அல்லது 182 என்ற இலவச அழைப்பு எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டனர். விழிப்புணர்வு பிரசாரத்தின்போது ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து சென்றவர்கள் எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்த பெண்களிடம் பாதுகாப்பாகச் செல்லுமாறும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com