மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு
By DIN | Published On : 27th July 2019 08:54 AM | Last Updated : 27th July 2019 08:54 AM | அ+அ அ- |

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாள்களில் 3 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளிலிருந்து 11 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து வெள்ளிக்கிழமை 42.14 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7,200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், குடிநீர்த் தேவைக்காக 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...