அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
By DIN | Published On : 09th June 2019 04:36 AM | Last Updated : 09th June 2019 04:36 AM | அ+அ அ- |

ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ம் ஆண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் சூ.அருள் அந்தோணி தெரிவித்தார்.
கலந்தாய்வுக்கு வரும் போது மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், 10,11, 12ஆம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்,அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல்,புகைப்படம்-3 (மாணவர் மற்றும் பெற்றோர்) தோராயமான தொகை ரூ.3500 ஆகியவற்றை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பப் படிவங்கள் அன்றே வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் சூ.அருள் அந்தோணி தெரிவித்தார்.
மேலும் தேசிய அக தர நிர்ணயக் குழுவின் வருகையையொட்டி, ரூ.1 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் திறக்கப்படவிருக்கிறது எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.