ஆசிரியர் தகுதித் தேர்வு: சேலத்தில் 7,636 பேர் எழுதினர்
By DIN | Published On : 09th June 2019 04:33 AM | Last Updated : 09th June 2019 04:33 AM | அ+அ அ- |

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 7,636 தேர்வர்கள் எழுதினர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 19 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளை எழுத 8,627 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7,636 பேர் தேர்வை எழுதினர். 991 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மேலும், தேர்வை எழுத 9.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 53 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22,168 பேர் எழுத உள்ளனர்.