எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சுவாமி தரிசனம்
By DIN | Published On : 09th June 2019 04:34 AM | Last Updated : 09th June 2019 04:34 AM | அ+அ அ- |

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
எடப்பாடியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை எடப்பாடிக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி, காலை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.
அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஆலய அறங்காவல் குழு சார்பில் முதல்வருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அங்கு கூடியிருந்த நாட்டியாஞ்சலி பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி முதல்வர், பின்னர் கவுண்டம்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.