தேவூரில் ரூ.15 லட்சத்துக்கு எள் விற்பனை
By DIN | Published On : 14th June 2019 11:08 AM | Last Updated : 14th June 2019 11:08 AM | அ+அ அ- |

சங்ககிரி, ஜூன் 13: தேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்துக்கு எள் விற்பனையாகின.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் தேவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற எள் விற்பனைன ஏலத்தில் எடப்பாடி, தேவூர், குள்ளம்பட்டி, பூலாம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், நாமக்கல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 200 மூட்டைகளில் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு ரூ. 112 முதல் ரூ. 117.80 வரையிலும், சிகப்பு எள் கிலோ ஒன்றுக்கு ரூ. 101 முதல் ரூ. 109.80 வரையிலும் மொத்தம் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனையாகின.
இச் சங்கத்தில் ஜூன் 6-ஆம் தேதி விற்ற விலையை விட நிகழ்வாரம் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு ரூ. 13 முதல் ரூ. 2.30 வரையிலும், சிகப்பு எள் கிலோ ஒன்றுக்கு ரூ. 13 முதல் ரூ. 2.30 மும் விற்பனையாகியுள்ளன. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தேவூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறும் மற்றும் அடுத்த ஏலம் ஜூன் 20-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது என கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.