பருவமழை இடர்பாடுகளைத் தெரிவிக்க கட்டணமில்லா எண் 1077
By DIN | Published On : 14th June 2019 11:08 AM | Last Updated : 14th June 2019 11:08 AM | அ+அ அ- |

சேலம், ஜூன் 13: சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவிபெற ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவி பெறவும், மேலும் புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தீ ஆகியவற்றால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவிபெறவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறையின் மூலமாக செல்லிடப்பேசி செயலி ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியின் பெயர் TN-SMART இதை தங்கள் செல்லிடப்பேசியில் உள்ள Google Play Store-ல் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
இச்செயலியின் மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல் மற்றும் பேரிடர் காலங்களில் தங்களுக்கு விழிப்பறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.