தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்றுவேன்: எல்.கே.சுதீஷ் உறுதி
By DIN | Published On : 22nd March 2019 08:41 AM | Last Updated : 22nd March 2019 08:41 AM | அ+அ அ- |

தான் வெற்றி பெற்றால் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
வாழப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அவர் பேசியது:-
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி
பெறுவர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்றார்.
கூட்டத்தில் அதிமுக சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன், ஏற்காடு எம்எல்ஏ கு.சித்ரா. மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குபேந்திரன், ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், பாமக துணைப் பொதுச்செயலர் குணசேகரன், தேமுதிக மாவட்டச் செயலர் இளங்கோவன், பாஜக, நிர்வாகிகள் மாணிக்கம், மணிகண்டன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆதரவு திரட்டினார்.
ஆத்தூர்,கெங்கவல்லி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக, பாமக,பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை வேட்பாளர் எல்.கே.சுதீஷ் சந்திக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள்ஆர்.எம்.சின்னதம்பி,அ.மருதமுத்து,கு.சித்ரா, அதிமுக மாவட்டத் துணைச் செயலர் ஏ.டி.அர்ச்சுணன், ஒன்றியச் செயலர்கள் சி.ரஞ்சித்குமார், கே.பி.முருகேசன்,இரமேஷ்,க.இராமசாமி,வ.ராஜா, நகரச் செயலர்கள் அ.மோகன்,எஸ்.மணிவண்ணன்,பேரூர் செயலாளர்கள் ஆர்.பி.ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் அணியின் மாவட்டத் தலைவர் எஸ்.சிவராஜன்,ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா.தென்னரசு, பாமக மாவட்டச் செயலர் எம்.பி.நடராஜன், நகரச் செயலர் மணிகண்டன்,தேமுதகி மாவட்டச் செயலர் ஏ.ஆர்.இளங்கோவன்,நகரச் செயலர் சீனிவாசன்,ஒன்றியச் செயலர் குமாரசாமி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சுபாரவி, கேப்டன் மன்றச் செயலர் சுல்தான் பாஷா,சோலை சந்திரன்,விஜயபாஸ்கர்,வெங்கடேசன்,தமாகா மாவட்டத் தலைவர் டி.காளிமுத்து, நகரத் தலைவர் வி.எல்.டி.சண்முகம், நிர்வாகி சத்யாசண்முகம், மணிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...