அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு
By DIN | Published On : 28th March 2019 09:40 AM | Last Updated : 28th March 2019 09:40 AM | அ+அ அ- |

சேலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுடைய பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் பா.கோட்டீஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, உறுப்பினர்கள் உடனடியாக தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஏற்காடு சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில், கோரிமேடு, சேலம்-8 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் lossssalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...