கெங்கவல்லியில் ரூ.1.30 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 09:19 AM | Last Updated : 28th March 2019 09:19 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில், ரூ.1.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி அருகே மும்முடி சோதனைச் சாவடியில் சின்னசாமி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே காரில், சேலம் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் இணை செயலரும், கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்த கமலக்கண்ணனும் (39), இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக ரூ.1.30 லட்சத்தை கொண்டு வந்தனராம். அவரை சோதனை செய்த பறக்கும் படையினரிடம், அவர் காட்டிய ஆவணம் போலியானது எனக் கூறி, பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜனிடம் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...