தமிழ் மாநில காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
By DIN | Published On : 28th March 2019 09:38 AM | Last Updated : 28th March 2019 09:38 AM | அ+அ அ- |

ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் டி. காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் டி. காளிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரத் தலைவர் வி.எல்.டி. சண்முகம் வரவேற்றார்.
கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த அதிமுக ஆத்தூர் நகரச் செயலாளர்அ. மோகன், ஒன்றியச் செயலாளர் சி. ரஞ்சித் குமார், நரசிங்கபுரம் நகரச் செயலாளர் எஸ். மணிவண்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சுபாரவி, கேப்டன் மன்றச் செயலாளர் சுல்தான் பாஷா, நகரச் செயலாளர் சீனிவாசன், வெங்கடேசன், பாஜக மாநில நிர்வாகி டி. ஜெயஆனந்த், மாவட்டத் தலைவர் தேவராஜ், புதிய தமிழக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் வாக்குகள் சேகரித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...