மேட்டூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 28th March 2019 09:19 AM | Last Updated : 28th March 2019 09:19 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து கேரள மாநிலத்துக்கு சுமார் 24 டன் பெயிண்ட்டில் கலக்க பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் திரவம் (ஒயிட் கெரசின்) கொண்டு செல்லப்பட்டது. புதன்கிழமை காலை மேட்டூர் அருகே உள்ள குள்ளமுடையானூர் அருகே சென்ற போது, நிலைதடுமாறிய டேங்கர் லாரி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் மண்ணெண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. லாரியில் இருந்த நால்வர் லாரியிலிருந்து குதித்து காயமின்றி உயிர்தப்பினர்.
தகவலறிந்த மேட்டூர் அனல் மின்நிலையம் மற்றும் தனியார் நிறுவன தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரையும், நுரையையும் பீச்சியடித்து தீப்பற்றாமல் தடுத்தனர்.
சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பிறகு டேங்கர் லாரி நேர் நிறுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக மேட்டூர்-சேலம் சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...