சங்ககிரியில் இன்றும், நாளையும் முழு உடல் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 30th March 2019 09:35 AM | Last Updated : 30th March 2019 09:35 AM | அ+அ அ- |

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வெள்ளி விழா கட்டட வளாகத்தில் முழு உடல் ரத்த பரிசோதனை முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறுகிறது.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், மும்பை தைரோகேர் பரிசோதனைக் கூடமும் இணைந்து முகாமை நடத்துகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் சர்க்கரையின் அளவு, கொழுப்பு, கல்லீரல், தைராய்டு, சிறுநீரகம், இரும்புச் சத்து, ரத்த அணுக்கூட்டு உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.
பரிசோதனைக்கு வருவோர் தேநீர், உணவு உள்கொள்ளாமல் வரவேண்டும் என்றும் கூடுதல் விவரங்களுக்கு 98423 52524, 87783 353377, 91717 16600 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...