வங்கியில் திருட முயற்சி
By DIN | Published On : 30th March 2019 09:33 AM | Last Updated : 30th March 2019 09:33 AM | அ+அ அ- |

வங்கியில் திருட முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தலைவாசல் அருகேயுள்ள ஊனத்தூரில் பல்லவன் கிராம வங்கிக் கிளையில் அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை முடிந்து, இரவு 7 மணிக்கு பூட்டி விட்டுசென்றுள்ளனர். அன்று இரவு 11 மணிக்கு வங்கியில் இருந்து சத்தம் வரவே, அருகில் வசிப்பவர்கள் திரண்டனர். அப்போது, வங்கியின் கதவில் இருக்கும் பூட்டை உடைத்துகொண்டிருந்த மர்ம நபர்கள் கிராம மக்களைப் பார்த்தவுடன் தப்பிச் சென்றனர். தகவலின்பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...