சங்ககிரியில் இன்றும்,  நாளையும்  முழு உடல் பரிசோதனை முகாம்

சங்ககிரி லாரி உரிமையாளர்கள்  சங்கத்தின் வெள்ளி விழா கட்டட வளாகத்தில்   முழு உடல் ரத்த பரிசோதனை முகாம்
Updated on
1 min read

சங்ககிரி லாரி உரிமையாளர்கள்  சங்கத்தின் வெள்ளி விழா கட்டட வளாகத்தில்   முழு உடல் ரத்த பரிசோதனை முகாம்  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறுகிறது.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும்,  மும்பை தைரோகேர் பரிசோதனைக் கூடமும் இணைந்து முகாமை நடத்துகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் சர்க்கரையின் அளவு, கொழுப்பு, கல்லீரல், தைராய்டு, சிறுநீரகம்,  இரும்புச் சத்து, ரத்த அணுக்கூட்டு உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.
பரிசோதனைக்கு வருவோர் தேநீர்,  உணவு உள்கொள்ளாமல் வரவேண்டும் என்றும் கூடுதல் விவரங்களுக்கு 98423 52524, 87783 353377, 91717 16600 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com