கொளுத்தும் வெயில்: கம்மங்கூழ் வியாபாரிகளைத் தேடும் மக்கள்
By DIN | Published On : 05th May 2019 05:26 AM | Last Updated : 05th May 2019 05:26 AM | அ+அ அ- |

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து கோடை வெயில் மக்களை வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கம்மங்கூழ் அருந்தி தாகங்களைத் தணித்து வருகின்றனர்.
இதனால் சங்ககிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கம்மங்கூழ் விற்கும் இடங்களில் அதிக மக்களைக் காண முடிகிறது.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச் சாவடி வழியாக சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கியதை அடுத்து இந்தச் சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி அங்குள்ள தற்காலிகக் கடைகளில் இளநீர், கம்மங்கூழ், மோர் வாங்கி அருந்தி தாகம் தணிக்கின்றனர். இதனால் வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.