பேரூராட்சிகளில் தண்ணீர் பந்தல்
By DIN | Published On : 05th May 2019 05:26 AM | Last Updated : 05th May 2019 05:26 AM | அ+அ அ- |

கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தம்மம்பட்டியில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்,மோர் பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பேருந்து நிறுத்தம்,பேருந்து நிலையங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி,தெடாவூர், கீரிப்பட்டி,கெங்கவல்லி,வீரகனூர் பேரூராட்சிகளிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.