இந்து முன்னணி ஆலோசனை
By DIN | Published On : 15th May 2019 08:50 AM | Last Updated : 15th May 2019 08:50 AM | அ+அ அ- |

இந்து முன்னணியின் சேலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, வாழப்பாடியில் நடைபெற்றது.
கூட்டத்தில், சேலம் கோட்ட இந்து முன்னணி மாநாட்டை தேசிய விழிப்புணர்வு மாநாடாக வாழப்பாடியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கு இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொறுப்பாளர்களை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், கோட்டத் தலைவர் சந்தோஷ், மாவட்டச் செயலாளர் பிரசாந்த், கோட்ட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.