ஏற்காட்டில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 08:51 AM | Last Updated : 15th May 2019 08:51 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கித் தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு சுற்றுலாப் பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. வாகனங்களுக்கு போதுமான வாகன நிறுத்தம் இடம் இல்லாததால் சாலைகளில் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துத் பாதிக்கப்படுகிறது. படகு இல்லம், மான் பூங்கா பகுதிகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளி விளையாட்டுத் திடல்களை தற்காலிக வாகன நிறுத்த இடமாகவும், அண்ணா பூங்கா சாலைகளில் நிறுத்தும் வாகனங்களுக்கு நாகலூர் சாலையில் நாய் கண்காட்சி திடல் வாகனம் நிறுத்தம் இடமாகவும் அமைத்துத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.