கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் சாவு
By DIN | Published On : 19th May 2019 07:43 AM | Last Updated : 19th May 2019 07:43 AM | அ+அ அ- |

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தார்.
ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தே.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (29) , சேலம் பால் மார்க்கெட்டில் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.
இவரது மனைவி சங்கீதா (22), வீட்டில் மாடு வைத்து வளர்த்து வருகிறார். இவர்களுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாட்டுக்கு புல் அறுப்பதற்காக விவசாயத் தோட்டத்துக்கு சங்கீதா சென்றார். அப்போது, கால்தவறி 60அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்தார். இந்த நிலையில், கிணற்றில் மின்மோட்டார் வைத்திருக்கும் இரும்புக் கம்பியில் மோதியதில், பலத்த காயம் அடைந்த சங்கீதா கிணற்றில் விழுந்தார்.
இந்த நேரத்தில், சங்கீதா எழுப்பிய சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தோர் காப்பாற்ற முற்பட்டனர்.
தகவின்பேரில் ஓமலூர் தீயணைப்பு வீரர்கள், கருப்பூர் போலீஸார் விரைந்துவந்தனர். இருப்பினும், கிணற்றில் இறந்த நிலையில் சங்கீதாவின் சடலத்தை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவரது சடலத்தை பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.