மேட்டூர் அணையின் நீர்வரத்து 33 கனஅடி
By DIN | Published On : 19th May 2019 09:25 AM | Last Updated : 19th May 2019 09:25 AM | அ+அ அ- |

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 33 கனஅடியாகச் சரிந்துள்ளது.
கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 88 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 33 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணையின் நீர் மட்டம் 48.82 அடியாகவும், நீர் இருப்பு 17.07 டி.எம்.சி.யாகவும் இருந்தது. நீர்வரத்து சரிந்ததால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.