ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
By DIN | Published On : 19th May 2019 07:43 AM | Last Updated : 19th May 2019 07:43 AM | அ+அ அ- |

ரயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.
சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த மணி (54) , தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு திருமணமாகி இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதாம்.
இவர் சனிக்கிழமை காலை காலைக்கடன் கழிப்பதற்காக தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது காலை 11.10 மணிக்கு சேலம் டவுன் பகுதியில் இருந்து மின்னம்பள்ளியை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தார்.
தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாரும், சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.