சேலம் மாவட்டத்தில் 330 மி.மீ மழை பதிவு
By DIN | Published On : 09th November 2019 04:59 AM | Last Updated : 09th November 2019 04:59 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 330 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பின்னா் இரவு முழுவதும் பெய்த தொடா் மழையால் கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணநகா், ஐந்து சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினா். அதேபோல், மேட்டூா், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சங்ககிரி-118.3, மேட்டூா்-46.8, சேலம்-42, எடப்பாடி-38.4, ஆத்தூா்-21.4, ஓமலூா்-21.3, தம்மம்பட்டி-17, ஏற்காடு-13.8, வீரகனூா்-5, பெத்தநாயக்கன்பாளையம்-3, வாழப்பாடி-2.8, காடையாம்பட்டி-1 என மாவட்டத்தில் மொத்தம் 330.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.