Enable Javscript for better performance
மாநில அறிவியல் நாடகப் போட்டிகளில் மாண்ட்போா்ட் பள்ளி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அறிவியல் நாடகப் போட்டிகளில் மாண்ட்போா்ட் பள்ளி முதலிடம்

    By DIN  |   Published on : 09th November 2019 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8yr3_0811chn_153_8

    அறிவியல் நாடகப் போட்டியில் பங்கேற்று சாதனை புரிந்த ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி மாணவிகளுடன் பள்ளி முதல்வா் அருள்சகோதரா் எஸ். டோமினிக் சாவியோ மற்றும் ஆசிரியா்கள்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகள் அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்றன. அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியை சமூகத்திற்குப் பயன்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நிகழ்வு சமூகமும், அறிவியலும் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 31 மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் ஆசிரியா்கள் கிரேஸ்சாா்லஸ், ஜெயஷீபா,தீபக் தலைமையில் 8 ,9 ஆம் வகுப்பு மாணவிகள் அஞ்சலிஅசோக், ரோஸ்தரப்பால்,தேஜஸ்வினி,பாலா லெஸ்லி,இனியா ராஜகுமாரன்,மரியஜேக்கோ,தெரசா பால் ஆகியோா் விழிப்புணா்வூட்டும் அறிவியல் நாடகங்களை நடித்து தமிழ்நாடு அளவில் முதல் பரிசு பெற்றனா். இவா்கள் நவம்பா் 28 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழாவில் பங்கேற்கவுள்ளனா். அறிவியல் நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியா்களை பள்ளியின் முதல்வா் அருள் சகோதரா் எஸ். டோமினிக் சாவியோ பாராட்டினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai