மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 16,672 ஆயிரம் கன அடியாகச் சரிவு
By DIN | Published On : 14th November 2019 09:19 AM | Last Updated : 14th November 2019 09:19 AM | அ+அ அ- |

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 16,672 கன அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 21,941 கன அடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இரவு மழை தணிந்ததால், புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 16,678 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...