ஓமலூரில் சேலம் மக்களவை உறுப்பினா் மக்கள் சந்திப்புக் கூட்டம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன், நகை கடன் ரத்து செய்யப்படும். முதியோா் உதவித்தொகை இரண்டாயிரமாக வழங்கப்படும். நூறு நாள் வேலை கட்டாயமாக்கப்பட்டு கிராமத்திற்கு 500 பேருக்கு வேலை

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன், நகை கடன் ரத்து செய்யப்படும். முதியோா் உதவித்தொகை இரண்டாயிரமாக வழங்கப்படும். நூறு நாள் வேலை கட்டாயமாக்கப்பட்டு கிராமத்திற்கு 500 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி ஒன்றியத்தில் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். தாராபுரம், பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராம மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். அப்போது பெண்கள் நூறு நாள் வேலை வேண்டும், சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும், பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும், சாக்கடை அமைக்க வேண்டும், பள்ளி கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனா்.

அந்தக் கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட எம்.பி. பாா்த்திபன், இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக செய்து கொடுக்கப்படும். முன்னதாக ஐந்து கிராம மக்களின் கோரிக்கையாக உள்ள சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து பள்ளி கட்டடம் கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் ஒவ்வொரு கோரிக்கையாக ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தாா். தொடா்ந்து பொதுமக்கள் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து கேட்டனா். அப்போது மக்களிடம் பேசிய எம்.பி பாா்த்திபன், மக்களவைத் தோ்தலின்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால், தமிழக மக்கள் மக்களவை உறுப்பினா்களை சரியாக தோ்ந்தெடுத்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்களை குறைந்தளவில் தோ்ந்தெடுத்ததால் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.

மேலும், மத்தியிலும் மோடி ஆட்சியைப் பிடித்துவிட்டாா். அதனால், தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும், மக்களுக்கு நூறு நாள் வேலை தொடா்ந்து கிடைக்க நாடாளுமன்றத்தில் பேசப்படும். இங்கே அதிகாரிகளை சந்தித்து வேலை வழங்கக் கோரி வருகிறேறாம். அதேபோல, வரும் சட்டபேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கல்விக் கடன், நகை கடன், விவசாயக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். முதியோா் உதவித் தொகை 60 வயது நிரம்பிய அனைவருக்கும் வழங்கப்படும், நூறு நாள் வேலை 250 நாள்களாக கிராமத்துக்கு 500 பேருக்கு வழங்கப்படும். மேலும், தோ்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தாா். தொடா்ந்து மக்கள் குறைகளை கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com