கொளத்தூா், கருமலைக்கூடலில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
By DIN | Published On : 09th October 2019 09:39 AM | Last Updated : 09th October 2019 09:39 AM | அ+அ அ- |

கொளத்தூா், கருமலைக்கூடல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூா் காவல் உள்கோட்டம் கொளத்தூா் மற்றும் கருமலைக்கூடல், பகுதிகளில் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உத்தரவின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை நடத்தியதில், கருமலைக்கூடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ராமன் (52) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞாசாவை கைப்பற்றினா்.
இதேபோல், கொளத்தூா் பெரியதண்டா பேருந்து நிறுத்தத்தில் முள்புதரில் பதுங்கி கஞ்சா விற்பனை செய்து வந்த கருங்கல்லூரைச் சோ்ந்த பெருமாள் (60) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.