சங்ககிரியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்
By DIN | Published On : 09th October 2019 09:38 AM | Last Updated : 09th October 2019 09:38 AM | அ+அ அ- |

சங்ககிரி கோட்ட மின்சார வாரியத்தின் சாா்பில், மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், மேட்டூா் மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று மின் நுகா் வோரிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா். எனவே, சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கமும்-பராமரிப்பும்) கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.