மேட்டூரில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் சாலை
By DIN | Published On : 01st September 2019 05:59 AM | Last Updated : 01st September 2019 05:59 AM | அ+அ அ- |

மேட்டூர் நகராட்சி பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை, சிறுபாலம் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.
மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் மேட்டூர் நகராட்சி 26-ஆவது வார்டில் காவேரிபாலம் முதல் அண்ணாநகர் வரை 210 மீட்டர் நீளத்துக்கு ரூ. 9.5 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கவும், 24-ஆவது வார்டில் சிறுபாலம் அமைக்க ரூ. 5 லட்சமும் நிதி ஒதுக்கினார்.
இத் திட்டப் பணிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் பணிகளை துவக்கி வைத்தார். மேட்டூர் நகர மன்ற முன்னாள் தலைவர் லலிதா சரவணன், முன்னாள் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், மேட்டூர் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி நிர்மல் ஆனந்த் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.