சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 02nd September 2019 04:37 AM | Last Updated : 02nd September 2019 04:37 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையத்தில் இயங்கும் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுôரிக்கு மாணவ-மாணவியருக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் அளிப்பதில் சிறந்து விளங்கியதற்கான "இன்டெர்ன்ஷால' விருது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இயங்கும் 3,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், மாணவ-மாணவியருக்கு முறையான பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதில், வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையத்தில் இயங்கும் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 703-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 67 -ஆவது இடத்தையும் பிடித்தது. இதற்கான "இன்டெர்ன்ஷால' விருது வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கல்லூரியின் செயலாளர் எஸ்.பாலு, பொருளாளர் பி.ஆனந்தன், முதல்வர் முனைவர் ஆர்.எ. சங்கரன், வேலை வாய்ப்பு அலுவலர் எ.ராமகிருஷ்ணன் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவி எஸ்.பிரியா ஆகியோர் கலந்துகொண்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் தலைவர் அணில் சஹஸ்ரபுதேவிடம், "இன்டெர்ன்ஷால' விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றனர்.