தடகளப் போட்டி: தாகூர் மெட்ரிக். பள்ளி சாம்பியன்
By DIN | Published On : 11th September 2019 10:02 AM | Last Updated : 11th September 2019 10:02 AM | அ+அ அ- |

தலைவாசல் மைய தடகளப் போட்டியில், தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக பெற்றது.
சேலம் மாவட்டம், தலைவாசல் மைய அளவிலான மாணவ-மாணவியருக்கான தடகளப் போட்டிகள் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், அக் கல்வி நிறுவனங்களின் தலைவர்ஆர்.லட்சுமிநாராயணன் தலைமையில் இரு தினங்கள் நடைபெற்றன.
ஆறகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வி.இராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.நிர்மலாதேவி ஒலிம்பிக் சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டியினை தொடக்கி வைத்தார்.
இதில், இளையோர் பிரிவில் 80 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம், 100 மீ, 200 மீ. ஓட்டப்பந்தயப் போட்டியில் தங்கம் என மொத்தம் 15 புள்ளிகள் பெற்று ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.நந்தினி சிறப்பிடம் பெற்றார். 15 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 107 புள்ளிகள் பெற்று தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மாணவர்களுக்கான மேல்மூத்தோர் பிரிவில், பிளஸ் 2 மாணவர் எஸ்.கிரிராஜ், 800 மீ, 1,500 மீ மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். தாகூர் பள்ளி மாணவர்கள் 17 தங்கமும், 12 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் பெற்று மொத்தம் 128 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 11-ஆவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
ஆத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் டி.தங்கவேல், தலைவாசல் காவல் உதவி ஆய்வாளர் ஐ.சக்திவேல்,பெரியண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.
கல்வி நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் ஆர்.பரமசிவம், இணைச் செயலர் ஆர்.முத்துசாமி, பொருளாளர் பி.காளியண்ணன், துணைத் தலைவர்கள் ஆர்.பிரபாகரன், சி.ரவி, இயக்குநர்கள் என்.ஆர்.பழனிவேல், ஆர்.ராஜு, பி.தங்கவேல், வி.பி.இராமசாமி, பி.சக்திவேல், பி.காளியப்பன், பள்ளி முதல்வர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினர். மைய இணை செயலர் ஆறகளூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஜி.பி.ராஜசேகரன் நன்றி கூறினார்.