கெங்கவல்லி அருகே வீரகனூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளர் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் பால்பாண்டியன், திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமஆண்டவர், வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.